brand logo
BestWeb.LK 2024 logo
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துப்பாக்கி தோட்டா மீட்பு

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துப்பாக்கி தோட்டா மீட்பு

11 February 2025 | yowas J J



கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் உள்ள பயண பொதிகள் பகுதிக்கு அருகில் இன்று 9 மி.மீ துப்பாக்கி தோட்டா ஒன்று மீட்கப்பட்டுள்ளது.


சிறிலங்கன் தரை உதவி பணிப்பெண்ணால் இந்த தோட்டா அவதானிக்கப்பட்டு, மேலதிக விசாரணைக்காக இன்று (10) அதிகாலை விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.


இது குறித்து பொலிஸார் அப்பெண்ணிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.


இந்த தோட்டாவை மேலதிக விசாரணைக்காக இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.



You may also like