brand logo
இலங்கை வருகிறார் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர்

இலங்கை வருகிறார் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர்

27 April 2024

 

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் இலங்கை வரவுள்ளார்.

 

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரை அவர் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதன்போது, அவர் கொழும்பு துறைமுகத்துக்கான கண்காணிப்பு விஜயமொன்றையும் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அவரது இந்த விஜயத்தின் போது இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி ஒப்பந்தம் குறித்தும் கலந்துரையாடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


You may also like