brand logo
BestWeb.LK 2024 logo
எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் கவின்?

எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் கவின்?

10 December 2023 | Mahendran Dinush Khan

நடிகர் கவின் இளன் இயக்கத்தில் 'ஸ்டார்' படத்திலும், சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் உள்ள புதிய படத்திலும் நடித்து வருகிறார்.


மேலும் இயக்குனர் நெல்சன் முதல் முறையாக தயாரிக்கும் படத்தில் கவின் கதாநாயகனாக நடிக்கின்றார். இப்படத்தை நெல்சனின் உதவி இயக்குனர் சிவபாலன் இயக்குகிறார் என தகவல்கள் சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

இந்த நிலையில் இதில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.


மேலும், இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கின்றார் .இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


You may also like