இ.போ.ச பஸ் மோதியதில் சிறுவன் பலி
02 April 2025 | கா.யோசியா
இ.போ.ச பஸ் மோதியதில் சிறுவன் பலி
02 April 2025 | கா.யோசியா
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மோதியதில் களுத்துறையில் இரண்டு வயது சிறுவன் இன்று உயிரிழந்துள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வஸ்கடுவ காலி வீதியைச் சேர்ந்த நிஹன்சா யாஷ் வீரதுங்க என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பஸ்ஸின் சாரதி கைதுசெய்யப்பட்டு களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.