மசாஜ் நிலையத்தில் ஆயுத முனையில் பாலியல் வன்கொடுமை
10 September 2024 | Rinosharaai
மசாஜ் நிலையத்தில் ஆயுத முனையில் பாலியல் வன்கொடுமை
10 September 2024 | Rinosharaai
மசாஜ் நிலையத்திற்குள் வாள்களுடன் சென்ற 6 பேர் இரு பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
கம்பஹா, பல்லுமஹார பகுதியில் உள்ள மசாஜ் நிலையமொன்றில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக யக்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மசாஜ் நிலையத்தில் ஐந்து பெண்கள் பணிபுரிந்ததாகவும், சந்தேக நபர்கள் அவர்களை அறையில் அடைத்து வைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, மசாஜ் நிலையத்தில் இருந்த இரு பெண்களை கடத்திச் சென்று கூட்டுப் பலாத்காரம் செய்து, பெண்களின் கைத்தொலைபேசி, பணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துச் சென்றதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யக்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்